Tuesday, January 24, 2012

பாதகத்தியே!!!















பாவி ஒருத்திக்கு பசித்ததில்
பாவப்பட்ட ஜீவன்கள்!!!
கருவில் கலைக்க மனமில்லையா?
பாதகத்தியிடம் பணமில்லையோ?
பசிக்கு எனக்கு சோறில்லை
பாப்பா உனக்கு பாலுக்கும் காசில்லை
பிச்சையெடுப்பதில் எனக்கு விருப்பமில்லை
பிறரிடம் உன்னை விட்டுச் செல்லவும் துணிவில்லை
பெத்ததும் பெத்தா மகராசி
உன்னையும் ஆணா பெத்து போட்டாளா?
கவலைப்பாடதே கண்மணியே..
உன்னை மிருகங்கள் அண்ட விடமாட்டேன்!!
அம்மாயில்லையடி நான் உனக்கு
அண்ணனும் இல்லையடி, அப்பன் என
சொல்லிடவே எனக்கு அறுவறுப்பாய் இருக்குதடி
காவலாய் இருப்பேனடி செல்லமே..
ஒரு களங்கம் வர காண விழையேனடி!!!
நாளைய விடியல் எங்கென்று தங்கமே
பாதிபடிக்கட்டில் மனம் கூடுகட்டுதடி!!!
தேகம் தாங்கும்படி செல்லமே
பாரம் சுமப்பேனடி தங்கமே.. நீ எனக்கு பாரமில்லையடி
இத்தனை பெரிய உலகத்திலே
இத்தூண்டு வயித்துக்கு சோறு போட
துப்பின்றி தூக்கியெறிந்த பாவிகளே
உடம்பு பசிக்க போய் எங்களுக்கு உயிர் பிச்சை போடதீர்கள்!!!

-

9 comments:

தமிழ் உதயம் said...

யாருக்கோ பசித்ததால் - இன்று இவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். மனதை தைத்த கவிதை.

Chitra said...

படமும் கவிதையும் மனதை கனக்க வைத்து விட்டன.

ராமலக்ஷ்மி said...

உருக்கம்:(!

arul said...

nalla karuthulla kavithai

இந்திரா said...

இந்தப் புகைப்படம் எனக்கு மெயிலில் வந்தது. இது படமல்ல.. ஓவியமாம். மிகவும் தத்ரூபமாக இருக்கிறது..

வரிகள் அனைத்துமே கனக்க வைத்துவிட்டது.

நட்புடன் ஜமால் said...

இது போன்றவர்கள் அதிகம் இருக்கின்றனர், இந்த அரசியல் வியாதர்களும் ஒன்றும் செய்யப்போவதில்லை, நாட்டு மக்களான நாமும் ஒன்றும் செய்வதற்கில்லை ...

தமிழரசி said...

எனக்கும் மெயிலில் வந்த படம் தான் இந்திரா அதை பார்த்ததில் இருந்து மனசே சரியில்லை..கவிதையா எழுதலை தோனியதை எழுதினேன்..அந்த புள்ளைங்களை பார்த்த பின் கவிதை தோனிச்சின்னா நான் தாய் இல்லைன்னு அர்த்தம்,,என் வருத்தத்தை அந்த பையன் சொல்வது போல் சொன்னேன்..

தமிழரசி said...

@ தமிழ் : படமும் அப்படி தான் தமிழ்

@ சித்ரா : கண்கூட பலரையும் பார்க்க நேரிடுது,,பரிதாப படமட்டுமே முடிகிறது.. நலமா சித்ரா? ரொம்ப நாளைக்கு பிறகு..

@ லஷ்மி : ம்ம்

@ அருள் : ம்ம்

@ ஜமால் : உச் கொட்ட நாமும் இருப்பதை சுருட்டிக் கொள்ள அரசியல்வாதிகளும்..

Sivasu said...

உண்மையில் இதை படித்ததும் மனது கனத்து தான் போகிறது...

உண்மையில் நான் உன்னுடைய comment படித்தேன்... இதை பார்த்ததும் கவிதை வந்தால் நான் அம்மாவே இல்லை என்று... ஆமாம் நீ சொன்னது மிகச்சரி...