இனி அகலிகைகளுக்கு
சாப விமோசனம் தரவேண்டாம்
இன்னும் இந்திரன்கள்
இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!!
--------------------------------------------------------
நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும் !!!
-----------------------------------------------------------
என் கப்பல் மூழ்கிடும்
கவலையில்லை..
கொள்வது தானே கடலின் இயல்பு !!!
------------------------------------------------
கர்த்தர் ரட்சிக்கும் முன்னே
நான் ஞானஸ்தானம் பெற்றுவிட்டேன்
எனக்கு முன் செல்லும்
அவர் சமூகம் என்பதால்!!!
---------------------------------------------
இன்னும் என்ன என்று தானே
கேட்கிறீர்கள்...
என்ன செய்ய இன்னும் இருக்கிறது
எனக்கான பக்கங்கள்!!!
-------------------------------------------------


11 comments:
துணுக்கள் போன்றவை படிக்க எளிமையா இருக்குங்க, இத மாதிரி இன்னும் முயற்சி செய்ங்க ...
//நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும்//
எனக்கும்! டச் பண்ணிட்டீங்க!
இந்தவரிகள் மிகவும் பிடித்திருக்கிறது!
கவிதைகள் ஹைக்கூ முத்துக்கள்! உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! பொங்கலுக்கும்!!
தத்துவ கவிதைகள் அருமையா எழுதறீங்களே!
அப்பப்போ இப்படியும் எழுதி வையுங்க.
ஒவ்வொன்றும் அழுத்தம் !
நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.
உங்க பார்வை ஷார்ப்பா இருக்கு :)
//நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும்//
karaiya?. illai Kharaiya?...
puriyalai. but theme super.
//நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும் !!!//
முடித்தாயிற்றா???
நலமா தோழி???
நம்ம பக்கம் வர்றதே இல்லையே???
உங்களின் கவிதை நடையில் பெரும் மாற்றங்கள்... மிகவும் அருமையாக இருக்கிறது... வாழ்த்துகள்.
Post a Comment