உப்பு வறுத்து துணியில் ஒத்தடம் தரும் அம்மா
எல்லாம் அக்கா வடித்த கண்ணீரில் வடித்தது தான்
பிஞ்சி போன உடம்போட தெக்கு மூலையில் அப்பா
பாலசந்தர் படத்தில் இருமல் தாத்தா மாதிரியே தாத்தா!!!
சின்னவன் மட்டும் ஸ்கூலுக்கு போக
பெரியவன் நான் கூலிக்கு போறேன்...
படிக்க ஆசை ஆனா ஒதுங்க முடியலை
விபத்தில் சிக்கி வீணாப்போனது அப்பா உடம்பு
வேலைக்கு போய் கூனாகி போச்சி அம்மா முதுகு
அழுது அழுது குருடாகும் முன்ன அக்காவ ஒரு ராமசாமியோ
கந்தசாமியையோ கைபிடிச்சி கொடுக்கனும் கடமை
நல்லா படிக்கிறான் சின்னவன் ஒத்த சட்டை தான்
பாவம் ரெண்டு நாளைக்கு ஒருக்கா துவைச்சி போடுதான்
அன்னாடம் கூலி அடுப்புக்கே எட்டலை - இப்ப போய்
அடிக்கடி சிரிக்கிறாள் அடுத்த வீட்டு கோவிந்தம்மாள்
என் அக்கா கன்னி கழியும் வரை அவள் காத்திருப்பாளா தெரியாது
ஆனாலும் பிடிச்சிருக்கு கூலிக்கு போகும் முன்
முந்தியை திருகியபடி சிரிச்சிட்டே நிப்பா - கடைக்கு போயி
டீ வாங்கியாரேன்னு எனக்கும் சேர்த்து குரல் கொடுப்பா!!!
புரண்டு படுக்கும் அக்கா கோவிந்தம்மாவை ஞாபகப்படுத்த
உடம்பெல்லாம் வலி அதுக்கும் கலங்கல கண்ணு
என்னை பார்க்கும் போதெல்லாம் கண்ணுல மின்னும் நிலா
கலங்கத்தான் வைக்கிறா இவளும் - இப்ப எல்லாம்
நானும் புரண்டு புரண்டு படுக்கிறேன் ஏழைக்கு காதல் ஆகாதுன்னு!!!
தலகாணி இல்லை முழங்கை தான்
மூழ்கி கொண்டிருக்கு கையும் காதலும் என் கண்ணீரில்!!!


6 comments:
சின்னவன் மட்டும் ஸ்கூலுக்கு போகபெரியவன் நான் கூலிக்கு போறேன்
]]
வரிகளில் இனிமை
அர்த்தங்களில் வலி ...
பெண்கள் காதலிக்க பட குறைந்த பட்சம் அழகாய் இருந்தால் போதும்.!
ஆனால் ..! ஆண்கள் காதலிக்க நிறைய அருகதை தேவை படுகின்றது..!
//அன்னாடம் கூலி அடுப்புக்கே எட்டலை - இப்ப போய்
அடிக்கடி சிரிக்கிறாள் அடுத்தவீட்டு கோவிந்தம்மாள்/// மொத்த கவிதையின் உயிரும் அடக்கமாகி போகின்றது..!
தலைக்காணி இல்லை முழங்கை தான்
இதை விட எளிமையா சொல்ல முடியாது வறுமையை
ஏழை வீட்டு இளைஞனின் காதல் இப்படி (இப்படி சாகும் வரை) இளமையாகவே இருந்து விடுகிறது.
அருமையான கவிதை.
( மனசை ரொம்ப பாதிச்சிடுச்சிங்க)
@ ஜமால் : நன்றி ஜமால்
@ தமிழ் : இது பற்றி நான் என்றும் யோசித்தது இல்லை தமிழ்..இந்த கவிதை நீங்க கொடுத்த கரு..பாராட்டும் உங்களுக்கு தான் சேரும்.
@ சுந்தர் : நன்றிங்க
@ சத்ரியன் : ம்ம்ம் இப்படி ஒரு வலி இருக்குன்னு தமிழ் சொல்லும் வரை யோசிச்சே பார்த்தது இல்லை நான்..
யாரைத்தான் விட்டு வைக்குது இது...இந்தக் காதல் !
Post a Comment