Tuesday, January 10, 2012

அவன்!!!

அவன் பார்வையால் என்னை
சேமித்தவனில்லை - ஆனால்
நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
அழகு என்னை ஈர்த்திருக்கலாம் - எழுத்தால்
என்றோ இழந்திருந்தேன் என்னை!!!

அவன் மெளனங்களை நான்
மொழி பெயர்ப்பதில்லை - அது
எனக்கான மொழி என்பதால் !!!

இதோ தட்டுத்தடுமாறிக் கொண்டு நான்
மெத்தனங்களை மட்டும் கணக்கில் கொண்டு
அன்று சொன்ன வார்த்தையை மட்டும்
அடிக்கடி நினைத்து கொண்டு ஆறுதல் தேடும் மனதை
துக்கம் விசாரிப்பது போல் பார்க்கிறது
துயரை விழுங்கிக் கொண்டிருக்கும் கண்கள் !!!

போதும் இந்த போராட்டம்
ஓய்வெடுக்கலாம் என்று களம் நீங்கும் நேரம்
கதவுகள் தட்டப்படும் பூட்டாதே உன் வாசலை
என் நேரமும் நான் பிரவேசிப்பேன் என்று
புன்னகைத்து புரிய வைக்கும்
நான் நேசிக்கும் புத்தகம் அவன்!!!

11 comments:

சங்கவி said...

//அவன் மெளனங்களை நான்
மொழி பெயர்ப்பதில்லை - அது
எனக்கான மொழி என்பதால் !!!//

காதல் வரிகள்...

நட்புடன் ஜமால் said...

காதலர்களுக்கான மொழியாகவே மெளனம் இருந்து வருகின்றது, கவிதைக்கும் ...

---------

என் நேரமும் நான் பிரவேசிப்பேன் என்று
புன்னகைத்து புரிய வைக்கும்
நான் நேசிக்கும் புத்தகம் அவன்!!!]]

இரசித்தேன் ...

சத்ரியன் said...

ம்ம்!!!

”காதலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”

தமிழ் உதயம் said...

இம்மாதிரியான கவிதைகள் வந்து கொண்டே இருக்கும் என்றால் - காதலையும், பிரிவு துயரையும் யாசிக்கலாம்.

தமிழ் அமுதன் said...

இந்த கவிதையால் காதலின் அழகு இன்னும் கூடுகின்றது..! காதல் பிடிக்காதவனுக்கும் பிடித்துபோகும் காதல்..! இது போல ஒருத்தி கவிதை எழுதினால்..!

sasikala said...

நான் நேசிக்கும் புத்தகம் அவன் அருமையான வரிகள் தோழி .

ஓசூர் ராஜன் said...

காதலர்களுக்கான மொழி மெளனம்?!

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு (ரொம்ப நாள் கழித்து நல்ல கவிதை படித்திருக்கேன்)

ஹேமா said...

அவன் நிறையவே அழகாயிருக்கிறான் !

வால்பையன் said...

அடடே!

புத்தகம் பேசுகிறது!

சுசி said...

semmmmma thamil :)