இருட்டில் எப்பவும் போல தலையணையை நனைக்கிறது கண்ணீர். கண் திறக்கவும் மனமில்லா இறுக்கம். நேற்று ஊருக்கு போய் வந்த அலுப்பு அசதியில் தூக்கம் வருமுன்னு பார்த்தால் தேவையில்லாமல் அவன் நினைவு எதனால் இப்போது? பயணம் இந்த பயணம் தந்தது தான் அவனைப் பற்றிய நினைப்பு..
எங்க இருக்கானோ எப்படி இருக்கானோ வேணாமுன்னு பேசி பிரிந்த அன்று பார்த்தது அடுத்து எனக்கு ரெண்டு பசங்க பொறந்து ஒரு நாள் நான் நடந்து போன சாலையில் எதிர்புறமாய் நடந்து போயிட்டு இருந்தான் வெள்ளை முழுக்கை சட்டை ஃப்ளூ ஜீன்ஸ் என எனக்கு பிடித்த அதே காம்பினேஷனில். நொடி தான் அவனும் பார்த்தான் என்னை, ஆனால் தலை குனிந்தவாறு போயிட்டான் நான் மட்டும் திரும்பிப் பார்க்கிறேன். எப்படி நேசித்தான் என்னை....வீட்டுக்கு வந்ததும் கணவரிடம் சொன்னேன். நான் தனாவை பார்த்தேன்னு..எங்க காதல் அவருக்கு தெரியும். அதனாலோ என்னவோ கண்டுக்கவே இல்லை. எங்க இருக்கான் எப்படி இருக்கான் கல்யாணம் ஆயிடுச்சான்னு ஆயிரம் கேள்விகள் கேட்டேன். அசட்டையாய் தெரியாது என பதில்..அப்படியே சோபாவில் உக்கார்ந்து அழுதிட்டே இருந்தேன். தெரியும் நான் அவனுக்காக அழறேன்னு அவருக்கும்..
செல்லம் நான் ரெண்டு நாள் தான் நான் ஊருக்கு போயிட்டு வந்திடுவேன் எனக்கு மனசில்லைடா போக இருந்தாலும் ஊரில் வாடகை வசூல், கடை,நிலம் இதெல்லாம் நான் போனால் தானே கணக்கு வாங்க அவாயிட் பண்ண முடியலைடா வந்திடறேன் நீ பத்திரமா இரு என்னையே நினைச்சிட்டுக்கு இருக்காதா சாப்பிடு, படி, நம்ம பிரண்ட்ஸ் கூட சினிமாக்கு போயிட்டு வான்னு சொல்லி பிரண்ட்ஸ் எல்லார்கிட்டையும் என்னை ஒரு தாயை போல ஓப்படைச்சிட்டு போவான் மாச மாசம் தன் சொந்த ஊருக்கு. அப்பா இல்லாததால் பதினெட்டு வயசிலேயே குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொருப்பில் பொருப்பாய் கவனமாய் வாழ்க்கையை ரசனையாய் சந்தோஷமாய் என்னோடு காதலாய் வாழ்ந்தவன் தான் என் தனா!!!
தாவணி போடும் அன்னைக்கு மட்டும் என் தேவதைன்னு சொல்வான். ஸ்கர்ட்டும் டிஷர்ட்டும் போட்டுட்டு போனால் அவனுக்கு சுத்தமா பிடிக்காது தாவணி எனக்கு பிடிக்காது..ரொம்ப கெஞ்சி கூத்தாடி நாளை போட்டுட்டு வாடா நான் வெயிட் பண்ணுவேன் நீ போகும் போது பார்ப்பேன்னு சொல்வான். . தீடீரென்று ஒரு நாள்தாவணி போட்டுக்கிட்டு போவேன். அன்னைக்கு பார்க்கனும் அவன் கண்களில் சந்தோஷம். சூப்பர்ன்னு கையால் சைகை செய்து கண்ணால் பேசுவான். மாலையில் ஹோட்டல் போவோம் முதல் சில வாய் எனக்கு ஊட்டி விடுவான் யார் பார்த்தால் எனக்கு என்னன்னு. கூட இருக்க பிரண்ட்ஸ் மட்டும் எங்க அப்படியே எங்களுக்குமுன்னு சொல்ல நானும் அவனும் நண்பர்களும் ஒரு வாய் ஊட்டுவோம். என்னை சந்தேகப்பட அவனுக்கு தெரியாது. நேசம் அந்த அளவு என் மேல் நம்பிக்கை. நான் சாப்பிட்ட பாதியை அப்படியே எடுத்துப்பான் ஸ்டரா போடாமல் குடித்த கூல்ட்ரிங்ஸ்சில் பாதி என்னை குடிக்கச் சொல்வான்..எப்பவும் தாவணி போட்டுக்கோடா உன்னை எல்லாரும் ஒரு மாதிரி பார்பது எனக்கு சங்கடமா இருக்குன்னு சொல்வான். மண்டையையாட்டிவிட்டு மறு நாள் என் விருப்பபடி வருவேன் அவன் பார்வையோ செயலோ அத்து மீறியதில்லை ஒரு முறை கூட..
யாரால் காதலிக்க முடியும் அவனை மாதிரி..சின்ன சின்ன விஷயத்துக்கு பந்தயம் கட்டுவான் சரி தோத்துட்டா என்ன பந்தயமுன்னு கேப்பான் நீயே சொல் என்பேன். சரி பிரன்ச் கிஸ் அப்படின்னு சொல்வான்..அந்த வயதில் அதற்கு அர்த்தம் புரியலை ஆனாலும் சரின்னுவேன் பந்தயத்தில் நான் தோத்தாலும் முத்தம் கேக்க மாட்டான் அடுத்த முறை சேர்த்து கொடுத்துடனும் கணக்கு வச்சிக்கோன்னு சொல்வான். என்ன எப்ப பந்தயம் கட்டினால் முத்தம் தான் பந்தயம் . சந்திக்கும் போதெல்லாம் பார்த்தவுடன் கை கோர்த்துக்கோவோம் அவன் கையை பிடிச்சிகிட்டே தான் இருப்பேன் வீடு திரும்பும் வரை.
அப்படி தான் அன்னைக்கும் திரும்பி வந்ததும் எனக்கு போன் பண்ணி வந்திட்டேன் வாடா பார்க்கனும் என்று சொல்ல எப்பவும் போல் நட்புக்கூட்டத்தோடு அவனை சந்திக்க போனேன். சினிமாக்கு போகலாமுன்னு ப்ளான் போட்டு எட்டு பேரும் போனோம். எப்பவும் போல என் பக்கத்தில் உட்கார்ந்த அவன் என் தோளில் சாஞ்சிக்கிட்டான். ஒரு நாள் முழுக்க ட்ரெயினில் வந்தது இப்பவும் ட்ரெயினில் வர மாதிரியே இருக்குடான்னு என் தோளில் அவன் சாய் கூட வந்து சாய்ந்துக் கொண்டது சொர்கமும்..அப்படியே ரெண்டு நாள் கதையும் பேசினான் என்னை முதலில் டா போட்டு செல்லம் கொஞ்சிய காதல் அவன்.. என் கழுத்து கீழ் அவன் பார்வை மேய்ந்த நாட்கள் கிடையாது ஆனால். அதற்குண்டா வயசு இல்லையா இல்லை அது காதலே இல்லையா தெரியலை . ஆனால் எல்லாத்துக்கு சேர்த்து வச்ச மாதிரி என்னை கொஞ்சிட்டே இருப்பான் போனில் மட்டும்..
கிளிப்பச்சை தாவணி, கறுப்பு ஜாக்கெட், கறுப்பு பாவாடையில் நான் போகும் போதெல்லம் என் கிளி நீன்னு சொல்வான். சிகரெட்டை சட்டுன்னு மறைப்பான் என் பார்வையில் இருந்து..மா நிறமாய் உயரமா மெல்லிசா இருப்பான். கிளி கொத்த நினைக்கும் உதடுகள் அவனுடையது. தீடீரென்று கால் என் மேல் பட என் மகன் எங்க இருக்கேன் நான் ஒஹ் எல்லாம் கடந்த காலமா? நான் தூங்கிட்டு இருந்தேனா இல்லை நினைச்சிட்டு நனைச்சிட்டு இருந்தேனா தலையணையை தெரியலை..தனா எங்கிருக்கடா? நீயும் என்ன மாதிரி தினத்துக்கு ஒரு முறை என்னை நினைக்கிறயான்னு என்னை நானே கேட்டுகிட்டு தூக்கத்தில் என் தோளில் சாய்ந்த மகனை தலையனையில் படுக்கவைத்தேன்..இது அவன் சாய்ந்த தோள் பக்கம் என்னையும் அறியாமல் கைகள் தடவுகிறது என் தோளை என் தனாவின் சுவாசம் படுவதாய் உணர்கிறேன் நான் கலைத்து விளையாடும் அவன் தலை முடி இப்ப எப்படி இருக்கும்?
நாங்க பிரிந்த அந்த நாள் தான் நாங்க தனியா சந்தித்த முதலும் க்டைசி நாளும். நண்பர்கள் துணையில்லாமல்.தனாவின் கண்ணியம் அவனை மனிதன் என எப்பவும் என் நினைவில் இருத்தி வைக்கும்..விதியை அன்னைக்கு தான் முதன்முதலாய் நம்ப ஆரம்பிச்சேன்..
தனா எப்படி இருக்கடா ? எங்க இருக்க? ஒரு முறை உன்னை பார்க்கனும் போல் இருக்குடா...தனா தனான்னு நாள் ஒன்னுக்கு நூறு முறை அழைப்பேனே..இப்பவும் மனசுக்குள்ள சொல்லிக்குவேண்டா தனா தனான்னு. நீ தந்த காதல் இன்னும் இருக்குடா எனக்குள்ள.. நீ காட்டிய அன்பும் அப்படியே இருக்கு நீ சாய்ந்த தோள் பக்கம் யாரையும் சாயவிடலை இதுவரை.இது தாண்டா என்னால் உனக்காக செய்ய முடிந்தது. நான் யாரிடமும் கோபமா பேசறதில்லை சண்டை போடறதில்லை உனக்கு பிடிச்ச அந்த சிரிப்பை சிரிச்சிகிட்டே தான் இருக்கேன். தனா நீ எங்கடா இருக்க?


12 comments:
அருமையான நடை
அப்ப்ப்ப்ப்பா.. என்ன ஒரு எளிமையா, கனமான உணர்வுகளை சொல்லி இருக்கிங்க தமிழ்..
செம்ம்ம்ம!!
அடடா! செம லவ்.
அதென்னவோ தெரியல. அடுத்தவங்க ‘டைரி’யைப் புரட்ட அதிகம் விரும்புகிறது, மனம்.
ungal manathil ulla vali appadiye ungal eluthukkalil prathipalikirathu
அம்மாடி...!இதுதான் காதலா..!
"தனா நீ எங்கடா இருக்க?"
தெய்வீக காதலர்கள் இணைந்து வாழ்வதில்லை....
காதல் என்றாலே ஒரு தவிப்பு.அது சுகமோ துக்கமோ எதுவானாலும் !
காதலின் பிரிவை சோகம் கலனந்த வரிகளில் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்
அது என்னமோ எழுத்தாளர்கள்ன்னாலே உண்மைய எழுதிட்டு "புணைவு"ந்னு போடனும் போல ...
எச்சூச் மீ! ‘,,,,,,,,,,,த்த்த்த்த்ததததம்ம்ம்ம்ம்ம்ம்’ போஸ்ட்டு எங்க!? தூக்கிட்டீங்களா!
/அருமையான நடை// ம்ஹூம்! அருமையான ஓட்டம்னு சொல்லணும்
@ இளா : நன்றி இளா
@ சுசி : சுசி அதே அதே!!
@ சத்ரியன் : இதுக்கு தான் கண்ணு பெரிசா இருக்க கூடாதுன்னு சொல்வாங்க!!
@ அருள் ; ஆஹா வாழ்க்கைன்னு வந்துட்டா வலி சகஜமே அருள் நன்றிங்க!!
@ தமிழ் : இதே தான் காதல் சொன்னால் எங்க நம்பறீங்க!!
@ இராஜாராஜேஸ்வர் : தெய்வீகக் காதலா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மனித காதல் அதான் பிரிவு எல்லாம்..
@ ஹேமா : மிக்கச் சரிடா!!
@ அவை நாயகன் : நன்றிங்க முதல் வருகைக்கு!!
@ ஜமால் : என்ன ஜமால் பண்ண எழுத்தாளர் எதை எழுதினாலும் லென்ஸ் போட்டு படிப்பதால் இருக்கும்..
@ ராஜன் : வாங்க ராஜன் வாங்க.. எஸ் போஸ்ட் ஹாஹாஹஹ எடுத்திட்டேன்!!
ராஜன் : ஆமாம் அருமையான ஓட்டம்!!
Post a Comment