வடிக்க ஆரம்பிக்கிறேன் சிற்பத்தை
இயலுமா எனத் தெரியவில்லை
வாயகன்ற பாத்திரத்தில்
மெல்லிய துணிக்கட்டி
ஊற்றிக் கொண்டிருக்கிறேன் நுணுக்கத்தை
சிற்பத்தை ஒரு பாத்திரமாய் வடிக்க..
தேக்கமாய் எதுவுமில்லை
எல்லாம் வடிந்து போக
வெறும் ஈரம் தாங்கி படர்ந்திருக்கிறது துணி
நனைந்த அடையாளத்தோடு..
முழுமை எனச் சொல்லிவிட முடியாது
சில மென்மையாய் கரைந்து
நுழைந்து வடிந்திருக்கலாம்
மேலும் வடிகட்ட விரும்பவில்லை
உளி பிசகாமல் சிலை வடிப்பதிலேயே
இனி என் கவனமும் ஆர்வமும்!!!


6 comments:
மன ஒருமைப்பாடுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு விதமான வழிபாடல்லவா..
நன்று..
தமிழ்...உங்கள் முழுக்கவனமும் உங்களோடு இருப்பதால் பயமில்லை !
மிக அருமை தமிழரசி.
@ குணா : நன்றிங்க குணா
@ ஹேமா : ஆமாம் ஹேமா
@ லஷ்மி : நன்றிங்க லஷ்மி
புதுமையான கற்பனை அருமை
//மேலும் வடிகட்ட விரும்பவில்லை
உளி பிசகாமல் சிலை வடிப்பதிலேயே
இனி என் கவனமும் ஆர்வமும்!!!//
ம்ம்.!
முழுமையாய் அனுமதித்து, ஆக்கிரமிக்கும் உத்தி அருமையாய் இருக்கே!
Post a Comment