Monday, January 30, 2012

ம்ம் - 20

கிள்ளி தந்த முத்தங்களை
எண்ணி விட எண்ணி
விரல் நீட்டி
மடக்கி கூட்டி
இல்லை தப்பு எனச் சொல்லி
கழித்து
படுத்திருந்த போது ஏழு
ஜன்னலோரம் வேடிக்கை
பார்த்த போது மூன்று
பனி மூட்டம் பார்க்கச் சொன்ன போது பாதி
பார்த்தும் பார்க்காமல் இருந்தானே
அப்போது ஒன்று..
நடந்து உடன் போன போது
ஒன்றா? இரண்டென்று நினைக்கிறேன்
இல்லை ஒன்று தான் ஆமாம் ஒன்று தான்
திரும்பி நின்றிருந்த போது
எட்டிப் போய் கொடுத்தேனே ஒன்று
ம்ம்ம்ம் கணக்கே சரிவரவில்லை
ஐவிரல் சேர்த்து
அழகு கன்னம் கிள்ள வெட்கி
ஒத்தை விரலால்
அவன் அசந்த நேரமெல்லாம்
தொட்டு என் இதழால்
தொட்டுக்கிட்ட முத்தமும்
ரெண்டு விரல் சேர்த்து
துளியுண்டு கிள்ளி கிள்ளி
தந்த முத்தமும் ஏனோ
கணக்கெடுக்கவே முடியவில்லை!!!
--


12 comments:

நட்புடன் ஜமால் said...

கணக்கெல்லாம் எடுக்கப்படாது

கணக்கா எடுக்கனும் ...

ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

துரைடேனியல் said...

முத்தத்தை கணக்கெடுத்துவிடலாம். முத்தத்தோடு தந்த அன்பை? நிறுக்க முடியுமா? அளக்க முடியுமா?

அருமையான கவிதை சகோ.

துரைடேனியல் said...

தமஓ 2.

ஹேமா said...

இருங்க இருங்க அடுத்த வருடத் தொடக்கத்தில நானும் கணக்கெடுத்துச் சொல்லுவேன்ல !

வியபதி said...

கணக்கு என்றால் செலவுக்கு ஏற்ப வரவும் இருக்குமே அந்தக் கணக்கைப் பற்றி............

செய்தாலி said...

ம்ம்ம் அருமையான கவிதை

sasikala said...

அடடா அருமையான கணக்கு

சத்ரியன் said...

விரல்களைக் கொண்டு கணக்கிட்டால் தப்புத்தப்பா தான் வரும்.

‘இதழ்களால்’ கணக்கெடுங்கள். சரிய்ய்ய்ய்ய்ய்ய்யா வரும் பாருங்கோ.

பத்மா said...

semmaiyyya irukku ,,,class attakasam pongo

வால்பையன் said...

மெய் மறப்பது என்பது இது தானோ!?

பிரியமுடன் பிரபு said...

கணக்கெடுக்கவே முடியவில்லை!!!
///


mmmmmmmmmmmmmmmmmmmmmm

:)

dhanasekaran .S said...

அருமையான சொல்லாடல்கள் வாழ்த்துகள்