என்னால் முடியவில்லை
நீ தவித்தது போதும்அம்மா தானே நானும்
என்னிடம் அழுதுவிடு
அடம்பிடி
கோபம் கொள்
மடியில் படு
கைவலிக்கும் வரை அடி
முட்டு
முரண்டு பிடி
நியாயம் பேசு
தவறை சொல்
தண்டனை தா
கடி
போடி என கத்து
எல்லாம் உன்னால் எனச் சொல்
பழி சுமத்து
முடியை பீய்த்துக் கொள்
தலை நிமிர்
என்னைப்பார்
எல்லாம் தணியும்
அணைத்துக் கொள்வாய் என்னை
நான் முத்தமிடுவேன்
நீ என் பிள்ளை
நான் உன் தாரம்!!!


3 comments:
ம்ம் ... நல்ல உணர்வுபூர்வமான வரிகள் தமிழ்!!
அய்யிய்யோ..!! அருமையான கவிதை..!!
Post a Comment