
பிரமிப்பின் நீள் முடிச்சை
தொடர்ந்து பயணமும்..
கதவிடுக்கில் கசிந்து
காற்றில் கலந்துக் கொண்டிருக்கு
உனக்கான ப்ரியங்கள்!!
இயல்பின் பொருட்டு
வண்ணம் பூசிய புன்னகை
இதழில் உதிரும் பொய் ஒலங்களை
வழியெங்கும் சிதறவிடும் போறாமை!!
அறிக்கைவிட்டு தேடவில்லை
மறக்க கூட நினைக்கவேண்டும்
அறிவேன் நான் - எனக்கு தெரியும்
ஆனால் எனக்கு தெரியவில்லை!!
இப்படியான பொழுதுகளில்
செம்மைபடுத்த சொல்லியும்
மேம்படுத்த சொல்லியும் சிலர்
முடியாது என்னால் என்னிலையில்
என்றும் மாற்றம் இல்லாது!!
நீ வாசித்த புத்தகம் - உன்னால்
முடிக்கப்பட்டதாகவே இருக்க
என் ப்ரியங்களுக்கு பணிக்கிறேன்
அவைகளுக்கும் விருப்பம் இதில்!!
நீ தீண்டியதன் பலனாய்
காய்ந்தாலும் உன் பாதங்களில் மட்டுமே
உதிரும் வரம் வாய்த்தவை ஆனது
நான் கொண்ட நேசம்!!!
- 



5 comments:
அருமைடி .....மறக்கவும் நினைக்க வேண்டும் ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
ப்ரியங்களின் அழுத்தம்...ம்ம்..ம் !
என்னமோ போங்க..!;)
இயல்பின் பொருட்டு வண்ணம் பூசிய புன்னகைஇதழில் உதிரும் பொய் ஒலங்களைவழியெங்கும் சிதறவிடும் போறாமை!!
ம் ம் ம்
ம்ம்ம்ம்..
வணக்கம் தமிழ்
Post a Comment