Friday, December 30, 2011

அப்பா என்றால் அன்பு...

ஒரு நாள் இராத்திரி மணி 12.45 இருக்கும் கதவு தட்டப்பட யாரா இருக்குமுன்னு கேள்வியோட கொஞ்சமா பயத்தோட கதவை திறக்க வெளியே “அப்பா “ ஒரு நொடி ஆடிபோயிட்டேன் என்னப்பா என்ன ஆச்சி என்ன இந்த நேரம் வந்திருக்கீங்கன்னு கேட்டேன்..ஒன்னுமில்லைம்மா பார்க்கணுமுன்னு தோனிச்சி அதான் வந்தேன் ஒன்னுமில்லையே தூங்கிட்டு தானே இருந்தன்னு அப்பாவின் கண்களில் ஒரு வித மிரட்சி படிக்க முடிந்தது என்னால் ஆமாம்பான்னு நான் முழுசா சொல்லலைன்னு அப்பா தெரிஞ்சிக்கிட்டார்..சரி நீ போய் படுத்துக்கோம்மா நான் காலையில் வரேன்னு சொல்லி என்னை திரும்பி பார்த்துகிட்டே போனார் அப்பா..

ஒரே ஊரில் தான் அம்மா அப்பா நான் தங்கைன்னு இருக்கோம். முடிந்த மட்டில் அப்பா என்னையும் குழந்தைகளையும் பார்க்க வராத நாட்களே இருக்காது வரும் போதெல்லாம் என் வார்த்தையில் தெளிவையும் முகத்தில் அமைதியையும் தேடுவார். அப்பாவுக்கு எப்படியோ தெரியும் ஏதோ தப்பு நடந்திருக்குன்னோ நடக்கப்போதுன்னோ சரியா சொல்லி வச்ச மாதிரி வந்து நிப்பார். நான்கு பெண்பிள்ளைகள் ஒரு பையன் என்றாலும் எங்களை அப்பா நேசித்தது அதிகம் கடைசி தங்கை கொஞ்சம் அதிக செல்லம் என்றாலும் நாங்க பொறாமை பட்டதில்லை. அப்பாவின் அன்பில் கடுகளவும் வேறுபாடு இருக்காது.

இப்படி தான் ஒரு நாள் பார்த்தால் காலை 4 மணிக்கு 5 மணிக்கு அப்படி வந்து வாசலில் இருக்கும் மாடிபடிக்கட்டுகளில் உட்கார்ந்திருப்பார். கதவை திறந்து பார்த்தால் சும்மாம்மா இந்த பக்கம் பேப்பர் வாங்க வந்தேன் அதான் இப்படியே வந்தேன்னு சொல்வார்.அப்பா இருப்பது நகரின் முக்கிய பகுதி நான் இருப்பது ஊருக்கு வெளியே..அங்கிருந்து 4 கிலோ மீட்டர்,, அப்பாவின் மனசுக்கு ஏதோ பட்டிருக்கும். அப்படி அப்பாவை பார்க்கும் போதெல்லாம் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கும்.

எதுக்கும் கவலைபடாதம்மான்னு சொல்லி சொல்லியே என்னை நெஞ்சழுத்தகாரி மாத்தி விட்டு இருந்தார் அப்பா. அந்த வழி ந்டத்தல் தான் இன்னும் என்னை எல்லாத்தையும் தாங்கும் சமாளிக்கும் பக்குவத்தை கொடுத்திருக்கு. வாசலில் பார்த்ததும் வாம்மான்னு சொல்லும் அந்த வார்த்தைக்கு இனி நிகராய் ஒரு வார்த்தை இல்லை உலகில்..உடனே அம்மாகிட்ட சொல்வார் அரசி வந்திருக்கு பார் பால் இருக்கா வேற என்ன வேணுமுன்னு கேட்டுகிட்டே சட்டைமாட்டிக்கிட்டு கிளம்பிடுவார் எனக்கு பிடிச்சதை வாங்கிட்டு வர..ஒரே ஊரில் இருப்பதால் தினமும் நான் போவதும் அவர் வருவதும் சகஜமாய் இருந்த போதிலும் தினமும் அதே அளவு அன்பை தருவார் அப்பா!!!

மாசம் முதலில் என்றால் 500ரூபாய் நடுவில் என்றால் 200 ரூபாய் கடைசி என்றால் 100ரூபாய் தருவார் அப்பா. அது போதாததுக்கு எனக்கு சாலை கடக்க இன்று வரை தெரியாது அதனால் அப்பா கூடவே வந்து பசங்களுக்கு பிடிச்ச தின்பண்டங்கள் வாங்கி தந்து ஆட்டோ ஏத்திவிட்டு ஆட்டோகாரருக்கு தனியா காசு கொடுத்து ஆட்டோ கிளம்ப பாக்கெட்டில் இருக்கும் ஐந்து ரூபாய் ரெண்டு ரூபார் ஒரு ரூபாய் காயின்ஸ் எல்லாம் எடுத்து திணிப்பார் அப்பா.. அந்த பணத்தில் எல்லாம் அப்பாவின் உழைப்பும் அன்பும் மட்டுமே இருக்கும் உறவாய்!!!

இன்னும் எழுத முடியலை கண்ணில் தண்ணீர் வழிமறிக்கிறது..அப்பா உனக்கு இணையா யாருப்பா இனி எனக்கு..இனி எந்த அசரீ சொல்லி இரவில் அதிகாலையில் வீட்டுக்கு வருவீங்கப்ப..என்னிடம் கருணை காட்ட இறைவனை அனுப்பி இருக்கீங்க..அதில் ஓரளவு உங்களை மறந்திருக்கின்றேன்.. உங்க கடைசி நாளில் உங்களுக்கு குணமாயிடுச்சிப்பா டாக்டர் சொல்லிட்டார்ன்னு சொன்ன பொய்யை நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்திற்காக நம்பினீங்க ஆமாவாமா அப்படியா சொன்னாங்க நிஜமாவான்னு கேட்ட போது என்னை நீங்க நம்பியதை பார்த்தேன் மன்னிச்சிடுங்கப்பா எனக்கு வேற வழி தெரியலை...2011 என்னை மாதிரியே ஒரு துரதுஷ்டமான வருஷம்பா.. நிறைய கஷ்டப்பட்டுட்டேன் இனி எது வந்தாலும் உங்க இழப்பைவிட பெரிசா இருக்கப் போறதில்லை.

எனக்கும் சீக்கிரம் சாகனும் எப்பவும் போல அங்கிருந்துகிட்டே வாம்மான்னு கூப்பிடுங்கப்பா!!!
-

18 comments:

தமிழ் அமுதன் said...

பிரபஞ்ச சுழற்சியில் மனித வாழ்க்கை சில நொடிகள்தான்.! இது நமக்கு நமது கடைசி நொடியில் தெளிவாய் புரியும்..! அந்த கடைசி நொடிக்கு பிறகு மிக குளிர்ந்த ஒரு பெருவாழ்க்கை துவங்கும்..! அங்கே சகல செளபாக்கியங்களுடன் அப்பா இருப்பார் ..!

தமிழரசி said...

@ தமிழ் : நன்றி தமிழ்..அப்பாவை மனசு ரொம்ப தேடுது..

தமிழ் அமுதன் said...

அவர் சந்தோசமாத்தான் இருப்பார் நீங்க விரைவில் போய் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் அதனால ஒரு 100 வயசு வரை இங்கேயே இருங்க..!;;))

தமிழ் உதயம் said...

ரெம்ப கஷ்டமாயிடுச்சு - படித்து முடிக்கையில். ஒவ்வொரு வரிகளிலும் எழுத்துகள் தெரியவில்லை. அன்பு தான் தெரிந்தது.

ILA(@)இளா said...

மனசு கனத்துப்போச்சுங்க

jeganjeeva said...

மௌனம்.

jeganjeeva said...

மௌனம்.

ஹேமா said...

அப்பா...தமிழ் அழவைக்கிறீங்க !

ராமலக்ஷ்மி said...

அப்பாவின் ஆசிகள் என்றும் உங்களுடன் இருக்கும் தமிழ். அதுவே உங்களை வழிநடத்தும்.

சத்ரியன் said...

அப்பாவின் அன்பை... நெகிழ்ந்து போயிட்டேங்க, தமிழ்.

விஜி said...

லூசா நீ? சீக்கிரம் சாகனுமா? அப்பறம் உன் புள்ளைங்க? அப்பா இறந்தா கூடவே போகனும்னா போனவருசம் எங்க வீட்டில் எத்தனை பேரு இறந்தாங்க. நாங்க இல்லை. ஒரு அளவு இருக்கு தமிழ். அப்பாவை நினைச்சுக்க, ஆனால் இந்த மாதிரி எழுதாதே

தமிழரசி said...

@ தமிழ் உதயம் : ம்ம்

@ இளா : ம்ம்

@ ஜெகன் ஜீவ் : ம்ம்

@ ஹேமா : ம்ம்

@ லஷ்மி : ம்ம்

@ சத்ரியன் : ம்ம்

உங்க அனைவருக்கும் என்ன பதில் சொல்லன்னு தெரியலை முட்டிக்கிட்டு வருது கண்ணீர்...

@ விஜி : முடியலை விஜி சரி இருந்து தானே ஆகணும்.

நிலாக்காலம் said...

என் மனசில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கீங்க.. உங்களுக்கு 2011, எனக்கு 2010. என்னதான் வெளியில் இயல்பா இருக்க முயற்சி பண்ணினாலும், ஒரு கொடுமையான வெறுமை மனசு முழுக்க நீடிச்சு இருக்கு.. :(

பித்தனின் வாக்கு said...

what is this tamil. saga aasai enru sollikittu.

ஒரு 100 வயசு வரை இங்கேயே இருங்க..!;;)

appadiye oru 1000000 kavithai elunthunga.....

wish you happy new year

பித்தனின் வாக்கு said...

லூசா நீ? சீக்கிரம் சாகனுமா?

correct loosa neee?. dont tell like this sys

sundar said...

ரொம்ப சிரமம் தான் அதீத அன்பினைப் பொழிந்த அப்பாவைப் பிரிவது.

ஆறுதல் சொல்வது எளிது.

மனதைத் தேற்றிக் கொண்டு வாழத் தொடங்குங்கள் அது தான் அவர் ஆசையாகவும் இருக்கும்

Sivasu said...
This comment has been removed by the author.
Sivasu said...

விஜி சொன்னது மிகச்சரி.. இப்படி அப்பா கூடவே நீயும் போகணும்னு நினைச்சா அப்புறம் உன் பிள்ளைங்களை யாரு பார்த்துப்பா.. லூசாப்பா நீ..

உனக்காவது கடைசி வருடம் வரை அப்பா இருந்தாங்க. அனால் எனக்கு நான் 12 வயசா இருக்கும் போதே எங்களை விட்டு போய்ட்டார்..

எனக்கு உன்னோட அன்பு புரியுது.. நீ உன் அப்பா மேல வச்சி இருக்கற அன்பையும் சேர்த்து சந்தியா & அருண் மேல காட்டுபா அது தான் உன் அப்பா க்கு நீ செய்யற நன்றிகடன் (ஆத்மா சாந்தி).

அதிகமா பேசி இருந்த மன்னிச்சிடுங்க