சிதைக்கப்பட்டன கனவுகள்
வல்லூறுகளின் எச்சத்தில் தீக்குளியல்
அவசரத் தேவைக்கென..
கிள்ளி முத்தம் கொடுத்தால்
கட்டி முத்தம் தருவான் அவன்
பிரகஸ்பதி திட்டவொண்ணா
வார்த்தையிலும் திட்டிடுவான்
தேகத்தை புண்ணாக்கி மருந்தாக
சில்லரையை இரைத்திடுவான்
பொறுக்கி கொள்ள வேண்டும்
நான் போய்த் தான் பொங்கியே போடவேண்டும்
பொழைக்க எத்தனையோ வழியிருந்தும்
பொது கழிப்பிடமாய் இவ்வாழ்க்கை
கழிப்பிடம் எங்கும் உண்டு என்ன
கழிப்பதில் தான் சற்று நாகரீகம்..
இது அத்தியாவசிய தேவை
அறிந்ததினால் ஏழைகளவாணிகளுக்கு
இயன்ற சேவையாய் இதை நான் செய்து வரேன்
எனக்கும் சும்மா சோறு தின்னா செரிக்காது..
தொழில் என வந்துவிட்டால்
உயர்வென்ன தாழ்வென்னா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனால் என்ன இது கொஞ்சம்
அவஸ்தையான சாவு..


13 comments:
சாவு மட்டும் அல்ல - அந்த வாழ்க்கையும் அவஸ்தை தான்.
நெசமாகவே கவுஜை எழுத ஆரம்பிச்சிட்டியா?
நமது அவலத்தின் பிரதிபலிப்பு! நல்லாஇருக்கு! சகோ,வாழ்த்துக்கள்!
this is a poem with truth
ஒரு பாலியல் தொழிலாளியின் வாக்குமூலம், கவிதையாய்.
பாராட்டுக்கள் தமிழ் மேடம்.
//நெசமாகவே கவுஜை எழுத ஆரம்பிச்சிட்டியா?//
இன்னும் இல்லையாம்:-))
@ தமிழ் : ஆமாம் தமிழ்
@ விஜி : நான் சொன்னனா?
@ ராஜன் : வாழ்த்து ஏன் ?
@ அருள் : ம்ம்
@ சத்ரியன் : சரிங்க
@ மணிஜி : அவ்வ்வ்வ்வ்வ்வ்
சுட்டெரிக்கும் வரிகள்..
ஒரு ஆணால் நிச்சயமாய் இப்படிச் சிந்திக்க முடியாது தமிழ் !
தலைப்பே போதுங்க,
செம சவுக்கடி இல்ல இல்ல செறு ...
ஹேமா! உங்களுக்கு பதில் சொல்ல விருப்பம் தான் ...
என்றாவது உங்கள் பதிவுகளில் பதில் சொல்றேன் ...
ஜமால்...மாட்டிக்கிட்டேனா !
ஹேமா said...
ஜமால்...மாட்டிக்கிட்டேனா !
ஹா ஹா ஹா
அதெல்லாம் இல்லை ஹேமா!
சரி விடுங்க உங்க பதிவில் கதைப்போம்
Post a Comment