Monday, December 19, 2011

ஈரோடு சங்கமம்





ஜீவ நதிகளின் உயிரூட்டமாய் நதியின் ஓட்டத்திற்கு ஒப்பான அழகுடன் நிகழ்ந்த ஒன்று தான் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்திய இந்த சங்கமம். புரிதல் ஒற்றுமை திட்டமிடல் இது சங்கமத்தின் வேர். இது அரங்கத்திற்குள் நுழையும் முன்னேயே புரிகிறது. நிகழ்ச்சிக்கு செல்ல சற்று தாமதமானது. நுழைவாயிலில் வைத்திருத்த ரிஜிஸ்டரில் விஜி தன்பெயரை குறிப்பிட்டு என்னையும் ஏழு தோசை என்று பதிவு செய்து அங்கும் தன்னை வில்லி என நிருபித்துக் கொண்டார்.. நாங்க வரும் முன்னே காலையில் இருந்தே எப்ப வருவீங்க எங்க இருக்கீங்க வந்ததும் சொல்லுங்க வண்டி அனுப்பறோம் பிக் அப் பண்ண என்று அக்கறையான அழைப்போடு தான் நேற்றைய எங்கள் விடியல் ஆரம்பம் இதே அக்கறையை கடைசி வரை காட்டிய நண்பர் சங்கவி என்றும் சதீஷ். சங்கமத்தில் தனக்கு பகிர்ந்த பணிகளில் இதையும் மிக நேர்த்தியாய் செய்துக் கொண்டு இருந்தார்..

நிகழ்ச்சி ஆரம்பித்திருந்ததால் நாங்கள் செல்லும் போது பதினைந்து பதிவர்களை தேர்ந்தெடுத்து பாராட்டும் நிகழ்வு நடந்தேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வரை பற்றிய அறிமுகம் செய்யும் போது அவர்களை பற்றியும் அவர்கள் படைப்புகள் பற்றி திரையில் காட்சியாக காட்டப்பட்ட விதம் திரைப்படவிழாவுக்கு பரிசளிப்பின் போது காட்சியினையிட்டு கைத்தட்டலோடு மேடையேற்றுவதை விட ஒரு படி மேலே போய் அந்த நேரம் மேளம் முழங்க கைதட்டலோடு அரங்கேற்றிய விதம் அடுத்த படிக்கட்டு அமைக்க அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தயாரானதை வெளிப்படுத்தியது.. அந்த பதினைந்து பேரின் முகத்தில் சந்தோஷம் பெருமிதம் அவர்கள் கண்களிலும் முகத்தில் பார்கவும் படிக்கவும் முடிந்தது..அவர்களை இரண்டொரு வார்த்தைகள் பேசச் சொன்னபோது அடுத்த முறை நாம் மேடையேற நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது..

இந்த அறிமுகத்தை கதிர்.மகேஷ்வரன், அருள் மொழி தொகுத்தளித்த விதம் அழகோ அழகு..ஒருவர் மாற்றி இன்னொருவர் ஒலிவாங்கியை மாற்றி பேசியவிதம் ரசிக்க முடிந்தது வரிசையில் நின்று மாற்றி மாற்றி உரையாற்றாமல் அவர்கள் முன் பின் அப்படி நின்றிருந்த விதம் நன்றாக இருந்தது.மூவரின் குரலும் இனிமையாகவும் தெளிவாகவும் இருந்தது.இந்த தொகுத்தளித்த விதம் நிகழ்ச்சிக்கு வெகு அழகை கூட்டியது எனச் சொன்னால் மிகையாகாது...

சங்கமம் சிறப்புடன் நடந்தேறவேண்டும் என்ற மன நிலையில் தன்னை எந்த அளவில் ஈடுபடுத்தி இருந்தார் என்பதை ஆருரன் அவர்கள் முகத்தில் தெரிந்தது ஆர்வமும் ஈடுபாடு..

அடுத்து நடுவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நிதானமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை எடுத்து சொன்னவிதமும் ஊக்கமும் மிக நேர்த்தி..

கதிர் உரையாடல் அவரின் ட்ரேட் மார்க் புன்னகையோடும் அவர் குரலுக்கே ஏற்ற சற்று அழுத்த அமைதியான நிதானத்தோடு சுருக்கமாகவும் சொல்லவந்ததையும் தெளிவாகவும் எடுத்துக்கூறி ஈரோடு சங்கமம் அறக்கட்டளை நிறுவ எண்ணியுள்ளது என்ற அதிகாரபூர்வமற்ற தகவலை அங்கு வெளியிட்டார்..

நிறைவாக செயலாளர் பாலாசி அமைதிக்கு பெயர் தான் பாலாசி பொறுமைக்கும் உறுதிக்கும் பெயர் தான் பாலாசி என்று சொல்லும் அளவு வெகு பாந்தமாய் தனது நன்றி நவில்தலை தெரிவித்தார்..

பின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் சுய அறிமுகம் செய்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது..

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்களின் சங்கமத்தில் உணவை பற்றி தமிழ் நல்லுலகம் அறியும் பாராட்டும் உபசரிப்பும் அன்பும் அக்கறை பொறுப்பு என அவர்கள் செலுத்திய அனைத்தும் விருந்தினரையோ நண்பர்களையோ உறவுகளையோ கவனித்த விதமாய் இல்லை சின்ன குழந்தகைகளிடம் காட்டும் அன்பும் கனிவும் அக்கறையுமாய் ஒவ்வொருவரையும் கவனித்த விதம் ஹேட்ஸ் ஆப் சொல்ல வைக்கிறது...

ஒரு புது உலகம் அதற்குள் நுழைகிறோம் தெரிந்து சிலர் தெரியாமல் சிலர் என வெளிவரும் போது சங்கமம் முக்கூடலில் அனைவரையும் சங்கமித்து ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்ற உணர்வை தரத் தவறவில்லை..இன்னும் அடுத்த ஆண்டுக்கான நாளேடு வாங்கவில்லை..வாங்கியதும் அடுத்த டிசம்பரில் எந்த நாளாய் இருக்கும் என கண்டிப்பாய் நாளோட்டை திரும்பும் கைவிரல்கள்..

உலகம் ப்ரியங்களால் நிரம்பி வழிகிறது..இதில் மூழ்கி திளைக்கத்தான் முடியும் மூழ்கி திணறமாட்டோம் என்பதற்கு இந்த ஈரோடு சங்கமம் ஒரு இலக்கணம்..

-

19 comments:

தமிழ் உதயம் said...

சங்கமத்தை அழகான வாக்கியங்களால் முடித்துள்ளீர்கள். அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமையான நிகழ்வைப் பற்றி அழகான பகிர்வு தமிழரசி.

Ramani said...

நிகழ்ச்சி குறித்து விளக்கிச் செல்லும் விதம்
மிக மிக அருமை வாழ்த்துக்கள் த.ம 4

நட்புடன் ஜமால் said...

உலகம் ப்ரியங்களால் நிரம்பி வழிகிறது..இதில் மூழ்கி திளைக்கத்தான் முடியும் மூழ்கி திணறமாட்டோம் என்பதற்கு இந்த ஈரோடு சங்கமம் ஒரு இலக்கணம்..]]


கவிதை காணோமேன்னு நினைச்சேன் ...

MANO நாஞ்சில் மனோ said...

உலகம் ப்ரியங்களால் நிரம்பி வழிகிறது..இதில் மூழ்கி திளைக்கத்தான் முடியும் மூழ்கி திணறமாட்டோம் என்பதற்கு இந்த ஈரோடு சங்கமம் ஒரு இலக்கணம்..//

அருமையான வாக்கியம்...!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>அடுத்து நடுவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் நிதானமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை எடுத்து சொன்னவிதமும் ஊக்கமும் மிக நேர்த்தி..

ஐ திங்க் அவர் சிறப்பு பேச்சாளர்

சி.பி.செந்தில்குமார் said...

>>உலகம் ப்ரியங்களால் நிரம்பி வழிகிறது..இதில் மூழ்கி திளைக்கத்தான் முடியும் மூழ்கி திணறமாட்டோம் என்பதற்கு இந்த ஈரோடு சங்கமம் ஒரு இலக்கணம்

கலக்கல்... ஆனா நீங்க யாருன்னு தெரியலையே, ஓக்கே நான் சங்கவிட்ட கேட்டுக்கறேன்

துரைடேனியல் said...

Arumaiyana pathivu. Nalla Nadai. Vaalthukkal Sago.
TM 8.

அமர பாரதி said...

விவரித்த விதம் அழகு. வருகைக்கு நன்றி.

சுசி said...

நல்ல பகிர்வு தமிழ் :)

சத்ரியன் said...

ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம் நிகழ்வுகளைச் சிறப்பாக தொகுத்து எழுதியிருக்கும் உங்கள் பதிவைப் படித்ததும்,

கலந்துக் கொள்ள முடியாமல் போன என்னை நினைத்து எனக்கே பரிதாபம் தோன்றியதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

ஈரோடு கதிர் said...

கவிதை எழுதும் விரல்கள்
இதையும் கவிதையாவே
எழுதியிருக்கே...!

நன்றி தமிழ்

arul said...

your description about the event is nice

தமிழரசி said...

@ தமிழ் : நன்றி தமிழ் சங்கமத்தின் அழகு கவிதை

@ லஷ்மி : நன்றி லஷ்மி

@ ரமணி : நன்றி ஐயா

@ ஜமால் : கவிதையாவா இருக்கு?

@ மனோ : நன்றி மனோ..அன்று மைக்கில் பேசியது நீங்கன்னு தெரியாது நேற்று நண்பர் சொன்னார்

@ செந்தில் : நன்றி செந்தில் .. நீங்க ஃப்ளூ டிஷர்ட் போட்டிருந்தீங்களா? நான் ப்லாக் சுடி போட்டிருந்தேன் அனேகமாய் நான் நினைத்தவராய் தான் நீங்க இருக்கனும்..

@ டேனியல் : நன்றிங்க

@ அமர பாரதி : நன்றிங்க

@ சுசி : நன்றிடா

@ சத்ரியன் : நல்லவேளை நீங்க வரலை வந்திருந்தால் உணவு பற்றாக்குறை வந்திருக்கும்..

@ கதிர் : இப்படி நிகழ்வை தந்த உங்களுக்கும் உங்க குழுவுக்கும் நன்றி கதிர்

@ அருள் : நன்றிங்க..

க.பாலாசி said...

அக்கா... வந்ததிலும் சந்தித்ததிலும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்..(தோம்).. நன்றியும்கூட...

சி.கருணாகரசு said...

பகிர்தல் சிறப்பு......

ஏற்பாட்டாளர்களுக்கு என் நேர்மையான பாராட்டுக்கள்.

ராஜி said...

>>உலகம் ப்ரியங்களால் நிரம்பி வழிகிறது..இதில் மூழ்கி திளைக்கத்தான் முடியும் மூழ்கி திணறமாட்டோம் என்பதற்கு இந்த ஈரோடு சங்கமம் ஒரு இலக்கணம்>>
சங்கமத்துல கலந்துக்கிட்டு அனுபவிச்சுட்டு பதிவு போட்டு வெறுப்பேத்துறீங்க. பொறாமையா இருக்கு சகோ கலந்துக்க முடியலியேன்னு

logu.. said...

அட.. லோகு.. நீ எங்கடா போன?
அதும் ஈரோடுல நடந்திருக்கு.

அடுத்த தடவை கேட்ச் பன்னிடலாம்.

logu.. said...

படிக்க படிக்க மிஸ் பன்னிடமோனு தோணுது.