Monday, December 12, 2011

மக்கும் மலர்கள்..

காற்றின் அசைவுக்காய்
காத்திருந்திருந்தது போல்
மெல்ல அசைய தொடங்குகிறது மரம்
தாங்கும் பக்குவம் கடந்த நிலையில்
மெல்ல உதிர்க்கிறது மலர்களை காம்புகள்

ஒன்றின்பின் ஒன்றென
ஒவ்வொன்றாய் என ஒருக்கிணைந்தும்
தனித்தும் காற்றின் அசைவின் தாக்கம்
கணித்து தன் இருப்பிடத்தை
அழ்காக்கிக் கொண்டிருக்கிறது மலர்கள்


மிதித்தும் எடுத்தும் சேர்த்தும்
அள்ளியும் விடுத்த வண்ணம்
கடந்துக் கொண்டு மனிதர்கள்
மீதமிருந்த மலர்கள்
காற்றில் பறந்து பரவி இருக்க
விட்டு அகலாத மலர்களை நிழலால்
அரவணைத்துக் கொண்டிருந்தது மரம்

கொண்டு சென்ற மலர்கள்
கூந்தலுக்கும் பூஜைக்கும்
காதலுக்கும் கசக்கவும்
எறியவும் வாடவும் செய்தன
வாய்த்திருந்தபடி - மீதமிருந்த மலர்கள்
பயனில்லை எனச் சொல்லாதபடிக்கு
மண்ணுக்கு உரமாய் மெதுவாய்
மக்கத் தொடங்கியிருந்து!!!

9 comments:

தமிழ் உதயம் said...

மலர்கள் மொட்டு விட துவங்கியதில் இருந்து மடிந்து முடிந்து போகிற வரை - ஒரு காட்சி வர்ணனையாய் கவிதை. மலர்களை போல கவிதையும் அழகு.

ஹேமா said...

தான் பூத்த மரத்தடியிலேயே மக்கி மண்ணாவது எவ்வளவு அதிஸ்டம் !

நட்புடன் ஜமால் said...

விட்டு அகலாத மலர்களை நிழலால்
அரவணைத்துக் கொண்டிருந்தது மரம்]]

மீதமிருந்த மலர்கள்பயனில்லை எனச் சொல்லாதபடிக்குமண்ணுக்கு உரமாய் மெதுவாய் மக்கத் தொடங்கியிருந்து!!!]]

இவ்வரிகள் மிக அழகு

அன்பின் ஆழத்தை உணர்த்துகின்றன‌

வாழ்வு சக்கரம் மென்மையாக சொல்லப்பட்டிருக்கின்றது, யாருக்கோ எங்கோ உபயோகப்பட்டு வீசப்படுவதை விட உன்னிலிருந்து வந்தேன் உனக்கே உரமாவேன் என்பது அழகிய நிலை


நிழல் கொண்டு அரவணைப்பது ஒரு தாயின் நிலையை உணர்த்துகிறது

மீண்டும் உரமாவேன் ஒரு பிள்ளையின் நிலையை உணர்த்துகிறது

தமிழரசி said...

@ தமிழ் : நன்றி தமிழ்

@ ஹேமா : பூவாய் பிறப்பதே அதிர்ஷடம் தான் ஹேமா.

@ ஜமால் : உங்களை தேட தான் ஊருக்குள் ஆளை அனுப்பி இருக்கிறேன். நலமா?

கவிதையாய் இருக்கு உங்க பாராட்டு நன்றி..

நட்புடன் ஜமால் said...

மிக்க நலம்ங்க, அங்கிட்டு எல்லோரும் நலம் தானே

சத்ரியன் said...

//காற்றின் அசைவுக்காய்
காத்திருந்திருந்தது போல்
மெல்ல அசைய தொடங்குகிறது மரம்.
மலர்களை உதிர்க்கிறது காம்புகள்...//

ஏதோ ஒரு சொல்லுக்காக ஏங்கும் மனம், ’அச்சொல்’அகப்பட்டவுடன், அல்லாடி அல்லாடி ஏகப்பட்ட சலனங்களில் சிக்கிச்சுழன்று ... ஓய்ந்து குவிகிறது துவங்கிய புள்ளியில்.

தமிழரசி said...

@ சத்ரியன் : அட உங்க கமெண்ட் வச்சி ஒரு கவிதை தேத்தலாம் போல் இருக்கே..

ஓசூர் ராஜன் said...

malargalukku pala manamum,payanum ullathu! valthukkal.

Rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...