Monday, December 26, 2011

ம்ம் - 18





ஓர் மழைக்கால மாலை வேளை குளிச்சி முடிச்சிருந்தோம் இருவரும் .சில்லுன்னு இருந்தது அறை மேலும் குளிருட்டும் பொருட்டு ஏசியும் ஐந்தில் சுற்றிக் கொண்டிருந்தது மின் விசிறி. ஆனாலும் ஏனோ நடுக்கமில்லை. லேசா ஈரமாயிருந்தது கூந்தல் எட்டியபடி தொட்டுப்பார்த்தான்.கருப்பு கண்ணாடி வளையல் ஏதோ கதை சொல்லியது. மழையில் நனையனுமுன்னு மனசு மட்டும் ஏங்கிட்டே இருந்தது.

சரி வெளிய போய் சாப்பிடலாம் இராத்திரிக்குன்னு சொல்ல ரெண்டு பேருக்கும் ஆசை மழை வராதான்னு.. என்னைக்கும் இல்லாத ரம்மியாமாய் தோன்றியது அந்த மழை நேர இரவு முதல் முதலாய். சேறும் சகதியும் பொருட்டாய் தெரியலை எனக்கு. இடது கையில் அவன் கையை பிடிச்சிகிட்டு வலது கையில் கொஞ்சமாய் சேலை கொசுவத்தை தூக்கியபடி சாலையில் நடக்க ஆரம்பிக்கின்றோம். எல்லாருக்கும் ஏதோ ஒரு அவசரம் மழை வரும் முன்ன வீட்டுக்கு போயிடனும் எப்படியும் பஸ்சை பிடிச்சிடனும் பத்திரமா சாலையை கடக்கனும் சேற்றை வாரி மேலே இறைக்க போறாங்கன்னு ஜாக்கிரதையா பலர், குண்டும் குழியுமா இருக்கும் சாலையில் பார்த்து கவனமா வண்டி ஓட்டும் வெகு பலர் இப்படி அவரவர் வேலையில் அவரவர் ஒன்றி போயிருந்த நிலையில் எல்லாரும் எனக்கு ஜடமாய் தெரிந்தனர் எங்களை பார்த்து பொறாமை படவில்லையே என!!

என்னங்க கொஞ்சம் நிதானமா நடங்க என்னால் உங்க அளவு வேகமா நடக்க முடியாதுன்னு சொல்ல என்ன நான் வேகமா நடக்கிறேனா இல்லையேன்னு சொல்லி எனக்காக சற்று வேகத்தை குறைத்து நடக்க எத்தனித்தாலும் அடுத்த சில நிமிடங்கள் அவன் வேகத்துக்கு என்னை நடக்க பணித்தேன். சாலை எல்லாம் சகதி எச்சில் என அசிங்கப்பட்டிருந்ததால் கவனித்தும் நடக்க வேண்டி இருந்தது. இதெல்லாம் அனிச்சையாய் நடந்தாலும் மனசுகுள் மட்டும் மழை. அவன் கைபிடித்து நடந்த அந்த தருணம் சாரலால் நனைந்தேன். தெரிந்தும் தெரியாமலும் அந்த உரசல் சீ வெட்கமாய் தான் இருக்கிறது என்ன இதுன்னு!!

தனியொரு உலகம் அமைத்து அதில் இருவர் மட்டுமே நடப்பது போன்றதொரு பிரமை. அந்த மாயை பிடித்திருந்தது வாழ்வின் மிக உண்மையான தருணம். சில்லுன்னு முகத்தில் அறையும் காற்று பிடித்திருந்தது.. லேசா போடும் தூறல் மழை வராத என்ற ஏக்கத்தை பெரிதாக்கியது. ஹோட்டலில் சாப்பிடும் போதும் அவனோடான தனிமை அந்த மெல்லிய வெளிச்சம் பரப்பிய இதமான சூடு அந்த சூழலை ரம்மியமாக்கியது. ஆதாம் ஏவாளாய் ஏன் இருந்திருக்க கூடாதுன்னு நினைச்சி எனக்குள் நானே சிரிச்சிக்கிட்டேன். சாப்பிட்டு முடிச்சி வெளியே வந்து மீண்டும் கையை பிடிச்சிகிட்டு சாலை கடக்கும் போதும் என்னை பத்திரமாய் வழி நடத்திய போதும் ஏனோ எதற்கோ அவனை எனக்கு மேலும் பிடித்தது..எத்தனை தூரம் நடந்தோம் தெரியவில்லை..கைகளில் மட்டும் மிதமான சூடு இருந்துக்கிட்டே இருந்தது இதோ வீடு வந்துவிட அந்த அழகிய இரவின் பிடியில் இறுக கதவை திறந்து நுழைகின்றோம்..அந்த மழைக்கால இரவில் ஒரு ஓவியக்காதல் எழுதப்படுகிறது அவனால்.!!!

7 comments:

தமிழ் அமுதன் said...

மெல்லிய சாரலாய் இருக்கிறது..!
காட்சிகள் கவிதையாய்...!

ஹேமா said...

ஜில்ன்னு ஒரு தமிழ்க் காதல் !

நட்புடன் ஜமால் said...

ஓவியக்காதல் - அழகு

தமிழ் அமுதன் சொல்லியது போல், காட்சிகள் கவிதையாய் ...

சத்ரியன் said...

கதவை தட்டாமல் உள்ளே வந்துட்டேன்னு நெனைக்கிறேன்.
இது ‘பெரியவங்களோட’ ஏரியா போல!

(அடுத்த பதிவு ‘சின்னபசங்க நாங்க’ படிக்கிறா மாதிரி எழுதுவீங்கன்னு நம்புறேன்.)

சத்ரியன் said...

‘டைரி’ நடையில் கவிதை. நிசமாவே வெகுவாய் ரசித்தேன், தமிழ் மேடம்.

நட்புடன் ஜமால் said...

(அடுத்த பதிவு ‘சின்னபசங்க நாங்க’ படிக்கிறா மாதிரி எழுதுவீங்கன்னு நம்புறேன்.)

நாங்களும் நம்புறோம் உங்கள :P

சத்ரியரே!

சுசி said...

அழகா இருக்கு தமிழ் :))